கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா இன்று உரிமை கோருகிறது

கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா இன்று உரிமை கோருகிறது
கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா இன்று உரிமை கோருகிறது
Published on

பனாஜி,

கோவா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும், மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜனதா புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. மேலிட பார்வையாளர்களான மத்திய மந்திரிகள் நரேந்திரசிங் தோமர், எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ், சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அதில், சட்டசபை கட்சி தலைவர் (முதல்-மந்திரி) தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின்னர், கட்சி தலைவர்கள் கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளையை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்.

புதிய அரசு பதவி ஏற்கும் தேதி, கவர்னரை சந்தித்த பிறகு முடிவு செய்யப்படும் என்று மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com