கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதியில் இன்று ஓட்டுப்பதிவு
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம்(எஸ்)- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முன்னதாக அங்கு கடந்த மாதம் 12-ந் தேதி 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 222 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை கைப்பற்றப்பட்டதால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு அந்த தொகுதியில் கடந்த மாத இறுதியில் தேர்தல் நடந்தது. இதேபோல் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணம் அடைந்ததால் இங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் இன்று(திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும். இந்த தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே நேரடி போட்டி ஏற்பட்டாலும், தேர்தல் முடிவு கர்நாடக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com