விவசாயிகள் கடன்களுக்கு தவணை செலுத்துவதில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களையும் ஏழைகளையும் மத்திய அரசு மறந்து விடவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விவசாயிகள் கடன்களுக்கு தவணை செலுத்துவதில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளிலிருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதன்கிழமை (நேற்று) முதல் வெளியிடுவார் என்றும் அறிவித்தார். அதன்படி அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் வகையில் நேற்றைய நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு இருந்தது. இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

*ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான அறிவிப்புகள் தொடர்ந்து இடம் பெறும்.

*புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய அரசு மறந்துவிடவில்லை.

*3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

*25 ஆயிரம் கடன் வரம்புடன் கடந்த 2 மாதத்தில் 25 லட்சம் புதிய கிஷான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

* சுமார் 4.22 லட்சம் கோடி அளவிற்கு கடந்த 3 மாதங்களில் விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்பட்டுள்ளன.

* விவசாயிகளின் கடன்களுக்கான வட்டியை செலுத்த வேண்டிய அவகாசம் மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து மே 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

* ரூ.86 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

*விவசாயிகள் கடனை செலுத்துவதற்கான காலம் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com