

குர்காவன்,
அரியானாவில் கேர்கி தவுலா சுங்க சாவடியில் கார் ஓட்டுனர் ஒருவர் பணம் செலுத்துவது பற்றி அங்கிருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் கார் ஓட்டுனர் பேசிய வார்த்தைகளால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர் இருக்கையை விட்டு எழுந்து சென்று பதிலுக்கு பேசியுள்ளார்.
இந்நிலையில், அந்த நபர் பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதனால் பதிலுக்கு அவரும் அந்த நபரை அடித்து உள்ளார். இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதனால் அந்த பெண் ஊழியர் கார் ஓட்டுனரை அடிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.