

பெங்களூரு,
கர்நாடகாவில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.
இதை தொடர்ந்து இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு கர்நாடக மாநில ஆளுநர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். முதலமைச்சர் என்பவருக்கு எப்போதும், பெரும்பான்மை இருப்பது அவசியம் என்றும் கடிதம் எழுதி உள்ளார்.
பாஜகவினர் ஆளுநரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை தந்து உள்ளார்.