காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க முக்கிய பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க முக்கிய பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்க முக்கிய பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டுக் கொலை
Published on

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பொன்பஜார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற படை வீரர்கள் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக படை வீரர்களும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் நடந்து வந்த இந்த தாக்குதல் தொடர்ந்து காலையிலும் நீடித்தது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதியான முக்கிய பயங்கரவாதி முன்னா லகோரி என தெரிய வந்துள்ளது. பீகாரை சேர்ந்தவரான அவரை இந்த இயக்கம் சேர்த்து கொண்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தி வந்துள்ளது. காஷ்மீரில் பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டதற்கு பின்னணியாக இவர் இருந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com