சத்தீஷ்கார்: 12 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
சத்தீஷ்கார்: 12 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.

நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த 12 நக்சலைட்டுகள் இன்று ஆயுதங்களை கைவிட்டு போலீசில் சரணடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் கைராகர் சுய்காடன் கண்டாய் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 12 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் ரமந்ஹர் மாஜி என்ற நக்சலைட்டின் தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com