சுற்றுலா சென்றபோது ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 8 பேரை தேடும் பணி தீவிரம்

கனமழை பெய்துவருவதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா சென்றபோது ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து; 8 பேரை தேடும் பணி தீவிரம்
Published on

கேங்டாக்,

ஒடிசா, உத்தரபிரதேசம், திரிபுராவை சேர்ந்த 11 பேர் காரில் சிக்கிமிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதில், ஒடிசாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இட்ஸ்ரீ ஜினா (வயது 46) மற்றும் குடும்பத்தினரும் அடக்கம்.

இந்நிலையில், சிக்கிமின் மங்கன் மாவட்டம் சவுங்தங் - லட்சென் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு 9 மணயளவில் கார் சென்றுகொண்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 1,000 அடி பள்ளத்தில் திஸ்டா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒடிசாவை சேர்ந்த சாய்ராஜ் ஜினா , ஸ்வயம் சுப்ரமித் நாயக் ( வயது 17) என இருவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால், கார் டிரைவர் உயிரிழந்தார். அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விபத்தில் கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் காரில் பயணித்த இட்ஸ்ரீ ஜினா உள்பட 8 பேரின் நிலை என்ன? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 8 பேரையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல், மீட்புப்பணி நடைபெறும் பகுதியில் கனமழை பெய்துவருவதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சென்றபோது ஏற்பட்ட இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com