மூணாறில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் - கடும் போக்குவரத்து நெரிசல்

சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினரோடு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை எதிரொலியாக கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான மூணாறில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினரோடு கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.
இதனால் மூணாறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி செல்கின்றன. நீண்ட நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக குடும்பத்தோடு வந்த சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






