நிலவொளியில் தாஜ்மகாலை கண்டுரசிக்க மீண்டும் அனுமதி

ஒவ்வொரு பவுர்ணமியை யொட்டியும் இரவுநேரத்தில் தாஜ்மகாலை கண்டு ரசிக்கஅனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
நிலவொளியில் தாஜ்மகாலை கண்டுரசிக்க மீண்டும் அனுமதி
Published on

புதுடெல்லி,

காதலின் சின்னமான தாஜ்மகாலை நிலவொளியில் கண்டு ரசிப்பது அலாதி இன்பம். இதற்காக ஒவ்வொரு பவுர்ணமியை யொட்டியும் இரவுநேரத்தில் தாஜ்மகாலை கண்டு ரசிக்கஅனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது நிலவொளியில் தாஜ்மகாலை பார்வையிட மீண்டும் அனுமதி அளித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்த மாதத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி தினம் ஆகும். இதை முன்னிட்டு நேற்று இரவு, நாளை (திங்கட்கிழமை) இரவு, நாளை மறுநாள் இரவு ஆகிய 3 நாட்கள் இரவு நேர பார்வைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு அடிப்படையில் ஒவ்வொரு பார்வை நேரத்திலும் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com