

சண்டிகர்
அரியானா மாநிலம் சிர்ஸாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதாவுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்கள் உள்ளன. அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாலியல் குற்றவாளி குர்மித் ராம் ராகிம் செக்ஸ் அடிமையாக இருந்தாலும் அவரது உதவியாளர்களின் கணிசமான பகுதியினர் ஓரினச்சேர்க்கையாளர்கலாக இருந்ததாக கூறப்படுகிறது.
பகட்டான உடைகள், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பர கார்கள், பக்தர் பட்டாளம் என குறுநில மன்னர் போல வாழ்ந்த அவர் தற்போது சிறையில் நாளொன்றுக்கு ரூ.20 ஊதியத்தில் வேலை செய்கிறார்.
ஆசிரம தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அடுத்தகட்டமாக அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் குர்மித்தின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் தேரா துணைத் தலைவர் தேரா சச்சா சவுதா டாக்டர் பி.ஆர் நெய்னிடம் நடத்திய விசாரணையில் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள் புதைத்து இருப்பதாக கூறினார் . அந்த அமைப்பின் பெயரிலும், அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பெயரிலும் உள்ள வங்கிக் கணக்குகளை பட்டியலிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதில், தேரா சச்சா சவுதா அமைப்பின் பெயரில், மொத்தம், 504 வங்கிக் கணக்குகளும், அவற்றில், 75 கோடி ரூபாயும் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளதாகவும், மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு சொந்தமாக, சிர்சாவில் மட்டும், 1,435 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.