

அப்போது டிராக்டரும், ஒரு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில், டிராக்டர் டிரெய்லரில் பயணித்த பக்தர்கள் 4 பேர் இறந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.