இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்க்கிறோம் - சீன தூதர் தகவல்

இந்த வரி விதிப்பும், வர்த்தக போரும் உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைப்புக்கு இடையூறாக இருப்பதாகவும் சு பெய்கோங் தெரிவித்தார்.
FILEPIC
FILEPIC
Published on

புதுடெல்லி,

இந்தியா மீது 25 சதவீத இறக்குமதி வரி மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25 சதவீதம் என 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து உள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் சு பெய்கோங் கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியையும், இன்னும் அதை அதிகரிப்பேன் என்ற மிரட்டலையும் சீனா முற்றிலும் எதிர்க்கிறது எனக்கூறினார்.

இந்த வரி விதிப்பும், வர்த்தக போரும் உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தக அமைப்புக்கு இடையூறாக இருப்பதாகவும் சு பெய்கோங் தெரிவித்தார். இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சினைக்கு மத்தியில் இந்தியாவுக்கு அளித்திருக்கும் சீனாவின் இந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com