17 வயது மகன் ஓட்டிய கார் மோதி வியாபாரி பலி: நீதிபதியை கைது செய்யக்கூடாது- ஐகோர்ட்டு உத்தரவு

நீதிபதியின் 17-வயது மகன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய கார்
Published on: 

மாவட்ட நீதிபதி ஒருவரின் 17 வயது மகன் ஓட்டிய கார் மோதி வியாபாரி பலி யான விவகாரத்தில், நீதிபதியை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு உத்த ரவிட்டது. இதற்கு இறந்தவரின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

நீதிபதியின் மகன்

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள செறாநல்லூரை சேர்ந்த ஜெயபாலகி ருஷ்ணன் (வயது 55) என்பவர், அப்பகுதியில் சாலையோர உணவகம் நடத்தி வந்தார். இவர் கடந்த 25-ந்தேதி அதிகாலையில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, ஜெயபாலகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வழக் குப்பதிவு செய்த போலீசார், காரை ஓட்டி வந்த 17 வயது சிறுவனை கைது செய் தனர். பின்னர் மாலையில் அவனை ஜாமீனில் விடுவித்தனர். அந்த சிறுவன் மாவட்ட கூடுதல் நீதிபதி ஒருவரின் மகன் ஆவார். மேலும் அந்த காரும் நீதிபதி யின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தது.

உறவினர்கள் போராட்டம்

சிறுவன் விடுவிக்கப்பட்டதை கண்டித்தும், சிறுவன் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்த அவனது தந்தையான மாவட்ட நீதிபதியையும் வழக்கில் சேர்க்க வலியு றுத்தியும், இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சமூக ஆர்வலர்களு டன் சேர்ந்து போலீஸ் நிைலயத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து போலீசார், நீதிபதியின் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். அவரை நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.எனவே அவர் கொச்சி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி கவுசர் எடப்பகத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு ஒத்துழைப்பு

மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் சிறுவனின் தந்தையான, மாவட்ட நீதிபதியை கைது செய்யக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு நீதிபதி ஒத்துழைப்பு வழங் கவும் உத்தரவிட்டார்.இந்த வழக்கில் மாவட்ட நீதிபதியை கைது செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவு இறந்தவரின் குடும்பத்தினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து இருக்கிறது. எனினும் கோர்ட்டு உத்தரவை மதிப்பதாக கூறிய அவர்கள், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து தங்கள் வக்கீல்களு டன் ஆலோசித்து முடிவு செய்வோம் என்று கூறினர். எனினும் இந்த விவகாரத் தில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

X