சபரிமலையில் துயரம்: மலை ஏறும்போது மாரடைப்பால் ஆந்திர பக்தர் உயிரிழப்பு

பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கி மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தபோது, ராம்பாபுவுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
சபரிமலையில் துயரம்: மலை ஏறும்போது மாரடைப்பால் ஆந்திர பக்தர் உயிரிழப்பு.
சபரிமலை ஐயப்பன்
Published on: 

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த, ஆந்திர மாநில பக்தர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தரிசனத்திற்காக மலை ஏறியபோது சோகம்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம்பாபு (வயது 45) என்ற ஐயப்ப பக்தர் தரிசனத்திற்காக இன்று (புதன்கிழமை) காலை சபரிமலைக்கு வந்துள்ளார்.

திடீர் மாரடைப்பு

பம்பையிலிருந்து சன்னிதானம் நோக்கி மலைப்பாதையில் ஏறிக்கொண்டிருந்தபோது, ராம்பாபுவுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதைக் கண்ட சக பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டனர்.

சிகிச்சை பலனின்றி மரணம்

உடனடியாக அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராம்பாபு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சபரிமலைக்கு வந்திருந்த சக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X