சுப விழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்; பெண் திடீர் உயிரிழப்பு

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சுப விழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்; பெண் திடீர் உயிரிழப்பு
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் கம்மம் த்ரி டவுன் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா, தனது உறவினர்களின் விட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு சென்று உள்ளார்.

புகைப்படம் எடுக்கும்போது சுஷ்மிதா (வயது 43) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

சுஷ்மிதா மயங்கி விழுந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com