மோதலில் உயிரிழந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த காவலர் விபத்தில் பலியான சோகம்

உணவு விடுதியில் நடந்த மோதலில் உயிரிழந்த நபரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பிய காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது.
மோதலில் உயிரிழந்த நபரை மருத்துவமனையில் சேர்த்த காவலர் விபத்தில் பலியான சோகம்
Published on

பராபங்கி,

உத்தர பிரதேசத்தின் பராபங்கி நகரில் ஸ்ரீ ராம்ஸ்வரூப் என்ற தனியார் பல்கலை கழகத்தின் முன்னாள் மாணவரான சுயாஷ் (வயது 25) தனது நண்பர் அலோக் (வயது 26) என்பவருடன் பல்கலை கழகத்தில் நடந்த கலாசார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் உணவு விடுதி ஒன்றிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

சுயாசுக்கும், அந்த பல்கலை கழகத்தில் படித்த மாணவர்கள் குழுவுக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. அந்த குழு, உணவு விடுதிக்கு சென்று சுயாசையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் கான்ஸ்டபிள்கள் ராஜ்குமார் பாண்டே மற்றும் ஜெயாஷ் ராம் ஆகிய இருவரும் அந்த பகுதிக்கு சென்று இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சுயாஷ் உயிரிழந்து விட்டார். அலோக் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து விட்டு திரும்பும் வழியில் கான்ஸ்டபிள்கள் இருவரும் சென்ற பைக் கால்நடை ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், அவர்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்களை லக்னோ நகரில் உள்ள சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் பாண்டே உயிரிழந்து உள்ளார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com