பீகாரில் சோகம்: குட்டையில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் பலி

துரதிருஷ்டவச மாக அனைவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகாரில் சோகம்: குட்டையில் மூழ்கி 6 சிறுவர், சிறுமிகள் பலி
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள குட்டையில் திஷா குமாரி (வயது12), சோனாக்ஷி குமாரி (9), பிரியா குமாரி (7), ஆராத்யா குமாரி (11), சோட்டி குமாரி (8) மற்றும் பிரின்ஸ் குமார் (11) ஆகிய 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது சிறுமிகளில் ஒருவர் குட்டை பள்ளத்தில் இறங்கி குளித்த போது திடீரென வழுக்கி விழுந்து நீரில் மூழ்க தொடங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உடன் சென்ற மற்ற சிறுவர், சிறுமிகள் குட்டையில் குதித்து அந்த சிறுமியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது துரதிருஷ்டவச மாக அனைவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி பலி யான 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com