ஜார்க்கண்டில் சோகம்: மருத்துவமனை கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட நோயாளி ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டில் சோகம்: மருத்துவமனை கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
Published on

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரின் மாவட்டத்தில் உள்ள பர்சுதிஹ் (Parsudih) பகுதியைச் சேர்ந்தவர்... அவர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர். கடந்த மார்ச் 16 அன்று உடல்நிலை தீவிரமான காசநோயினால் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில், அவரது தாயார் உறங்கிக் கொண்டிருந்தபோது, ​​நோயாளி நான்காவது மாடியில் உள்ள அறையில் இருந்து குதித்துள்ளார். மேலும் கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு முறை ஜன்னலில் இருந்து குதிக்க முயன்றதாகவும், ஆனால் அவரது தாயார் அவரை தடுத்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்.

மாடியில் இருந்து குதித்த நோயாளியை மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மீட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் எற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com