

லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பதாப்பூர் மாவட்டம் மல்வா பகுதியில் உள்ள வீட்டில் இன்று மதியம் 5 மணியளவில் குடும்பத்தினர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் வீடு இடிந்து விழுந்தது.
இந்த வெடி விபத்தில் வீட்டில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.