உத்தரபிரதேசத்தில் சோகம்: வேன் மீது லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி

விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் சோகம்: வேன் மீது லாரி மோதி கோர விபத்து - 6 பேர் பலி
Published on: 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும். 20 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து - 6 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டம் ரெவை கிராமத்தை சேர்ந்த 26 பேர் வேனில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவில்களுக்கு புனிதப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் கஸ்கஞ்ஜ் மாவட்டம் மோகன்புரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது எதிரே வேகமாக வந்த லாரி, வேன் மீது மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 20பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com