மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது விபரீதம்: வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்


மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபோது விபரீதம்: வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்
x

ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்ததில், தீ மளமளவென பரவ ஆரம்பித்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பகவதி பிரசாத் (வயது 90) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா தேவி (85). சம்பவத்தன்று பகவதி பிரசாத் தனது மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டதாக தெரிகிறது. அப்போது ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது.

சற்று நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. அப்போது வீட்டில் இருந்த தம்பதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story