வளைவில் திரும்பியபோது விபரீதம்! கண்டெய்னர் லாரி மீது மோதி நொறுங்கிய ஆம்னி கார்

ஆம்னி காரில் இருந்தவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கார் மோதி விபத்து
Published on

கொட்டாரக்கரை,

வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் கண்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியது.

ஆம்னி கார் விபத்து

கேரள மாநிலம் கொட்டாரக்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மாருதி ஆம்னி கார், தாமரச்சேரி சாலை வளைவில் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி காரின் முன்பகுதி முற்றிலும் நசுங்கியது. இதில் ஆம்னி கார் ஓட்டுநர் உள்ளே சிக்கினார்.

ஓட்டுநர் படுகாயம்

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆம்னி காருக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனர். பலத்த காயமடைந்த அவர் கொட்டாரக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com