இளம் ஜோடிக்கு கீழ் படுக்கையை தர மறுத்த ரெயில் பயணி; வைரலான பதிவு

உடனே பதில் ஏதும் சொல்லாமல், அந்த பெண் மேல் படுக்கைக்கு ஏறி சென்று விட்டார்.
புதுடெல்லி,
நபர் ஒருவர் தட்கல் டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணித்து உள்ளார். அவருக்கு ரெயிலில் பெட்டியின் ஓரத்தில் அமைந்த கீழ் படுக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 30 வயது மதிக்கத்தக்க இளம் ஜோடி அவரிடம் மேல் படுக்கைக்கு செல்லும்படி கேட்டு கொண்டது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தது மற்றும் அதன்பின்னர் நடந்த விவரங்களை, ரெட்டிட் என்ற சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.
அந்த பதிவில், யாரேனும் என்னிடம் வந்து அந்த படுக்கையை தர கூறி பேரம் பேசுவார்கள் என எனக்கு முன்பே தெரியும். எதிர்பார்த்தது போலே, இளம் ஜோடி ஒன்று வந்து என்னருகே அமர்ந்தது.
அவர்களுக்குள், என்னிடம் மேல் படுக்கையை பயன்படுத்தும்படி கேட்கலாம் என முணுமுணுத்தனர். கடைசியில், அந்த பெண் தன்னை அணுகி, நீங்கள் மேலே ஏறி கொள்ளுங்கள், சகோதரா என கூறினார்.
ஆனால், எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை விட்டுத்தர விரும்பவில்லை. இதனால், உடல்நலம் சரியில்லாதது போல் காட்டிக்கொண்டு, நான் வாந்தி எடுத்து விட்டால், என்னால் மேல் படுக்கைக்கு ஏற முடியாது என கூறினேன்.
உடனே பதில் ஏதும் சொல்லாமல், அந்த பெண் மேல் படுக்கைக்கு ஏறி சென்று விட்டார். இதனால், என்னுடைய 9 மணிநேர பயணம் அமைதியாக சென்றது என பதிவிட்டு உள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு ஆதரவாக பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் பாராட்டுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதில் ஒருவர், எனக்கு கீழ் படுக்கை பிடிக்காது என்றபோதும், யாரேனும் ஆணவத்துடன் என்னிடம் கேட்டால், நிச்சயம் நான் அதனை அவர்களுக்கு தரமாட்டேன் என பதிவிட்டுள்ளார்.
இன்னொருவரோ, இல்லை என கூறுங்கள். இந்த உலகம், உங்களுடைய தேர்வை மதிக்க கற்று கொள்ளட்டும் என்று பகிர்ந்திருக்கிறார்.






