காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது

காஷ்மீரில் பாதுகாப்பிற்காக ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியது.
காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் சுட்டு கொல்லப்படுகின்றனர் என கூறி பிரிவினைவாத அமைப்புகள் நேற்று போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ரெயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை மீண்டும் இன்று செயல்பட தொடங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் ரெயில் சேவை பகுதியாகவோ அல்லது முழுவதுமோ ரத்து செய்யப்படுவது இது 50வது முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com