நாளை முதல் நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு


நாளை முதல் நாடு முழுவதும் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு
x
தினத்தந்தி 30 Jun 2025 8:30 PM IST (Updated: 30 Jun 2025 8:30 PM IST)
t-max-icont-min-icon

500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும்.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வே துறை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ரெயில் டிக்கெட் கட்டணத்தை சிறிதளவு மாற்றி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதேநேரம் குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரெயில் டிக்கெட் உயரப் போவதில்லை.

அதாவது, இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், 500 கி.மீ வரையிலான தொலைவுக்கு டிக்கெட் கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ரெயில் டிக்கெட் உயர்வு இல்லை. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.

ஏசி அல்லாத ரெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது 500 கிமீ மேலான பயணத்தில் ஒரு கிமீக்கு ஒரு பைசா என்ற விகிதத்தில் கணக்கிட்டு கட்டணம் உயர்த்தப்படும் உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும்

மேலும், இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1ஆம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது. ரெயில் கட்டணம் உயர்வு சிறிதளவு மட்டுமே மாற்றம் ஏற்படும் என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story