திருமணம் ஆகியும் விடவில்லை..பணி நேரத்தில் உல்லாசத்திற்கு அழைப்பு..பெண் அதிகாரி தொந்தரவால் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை முயற்சி

கடந்த 2019-ஆம் ஆண்டில் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார்.
திருமணம் ஆகியும் விடவில்லை..பணி நேரத்தில் உல்லாசத்திற்கு அழைப்பு..பெண் அதிகாரி தொந்தரவால் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை முயற்சி
Published on

ஐதராபாத்,

பெண் அதிகாரியின் பாலியல் தொல்லையால் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். மேலும் அந்த பெண் அதிகாரி பணி நேரத்தில் தன்னை உல்லாசத்திற்கு அழைக்கிறார் என்று பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

ஐதராபாத்தில் பயிற்சி

யு.பி.எஸ்.சி. (மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ். தகுதி பெறுபவர்களுக்கு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் உதய் கிருஷ்ணா ரெட்டி (வயது 28) என்பவர் ஐ.பி. எஸ் பயிற்சி பெற்று வருகிறார். இதே அகாடமியில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரும் பயிற்சி ஐபிஎஸ் பயிற்சி பெற்று வருகி பெறுகிறார்.

பெண் அதிகாரி புகார்

இந்நிலையில் அந்த பயிற்சி பெண் அதிகாரி ஆந்திராவைச் சேர்ந்த பயிற்சி அதிகாரி உதய்கிருஷ்ணா

மீது ஐதராபாத் காவல்நிலையத்தில்தில் ஒரு புகார் அளித்தார். அதில் 'அகாடமியில் என்னுடன் பயிற்சி பெற்று வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான உதய்கிருஷ்ணா என்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார். மொபைல் போனில் ஆபாச தகவல்களையும் படங்களையும் அனுப்பி வந்ததோடு கடந்த 9 மாதங்களாக என்னை மிரட்டியும் வந்தார். மற்றவர்கள் மத்தியில் என் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவதூறாக பேசுகிறார்.

மேலும், என்னை வலுக்கட்டாயமாகத் தனது அறைக்கு இழுத்துச்சென்று, எனது முடியைப் பிடித்து கழுத்தை நெரித்துக்கொல்ல முயன்றார். மேலும் சுத் தியை எனது கழுத்தில் வைத்து அறையை விட்டு வெளியேற விடாமல் தடுத்தார்.

வழக்குப்பதிவு

மறுநாள் மீண்டும் தன் மீது தாக்குதல் நடத்தினார். "எனது அனுமதி இன்றி ஒரு தனிப்பட்ட வீடியோவை பதிவு செய்து, என்னை மிரட்டுவதற்காக எனது கணவருக்கு அனுப்பினார்" என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இப்புகாரைத் தொடர்ந்து உதய்கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

குற்றச்செயல்களைதடுக்கும் காவல்துறையினருக்கு உத்தரவிடும் உயர்பொறுப்பில் அமரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மையத்தில் நடந்துள்ள இந்த சம்பவம், ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்டிப்பிடித்து முத்தம்

இதனால் மனஉளைச்சல் அடைந்த உதய்கிருஷ்ணா விஷம் குடித்து தற்கொவைக்கு முயன்றார். தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர், விஷம் குடிப்பதற்கு முன்பு 2 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

பெண் அதிகாரி என் மீது அளித்துள்ள புகாரை நான் முற்றிலும் மறுக்கிறேன். அவர் என்னுடன் அவர் 2025-ல் இருந்து உறவில் இருக்கிறார். தற்போது வேறு பயிற்சி அதிகாரிகள் தூண்டி விட்ட தன்காரணமாகவே என்மீது அவர் புகார் அளித்துள்ளார். சம்பவத்தன்று அவர் வலுக்கட்டாயமாக எனது அறைக்குள் நுழைந்தார். தற்போது அவருக்கு திருமணமாகி விட்டது. அதன்பிறகும் என்னுடன் ஆன உறவை செக்ஸ் ரீதியாகவும், உணர்வு பூர்வமாகவும் தொடர வற்புறுத்தினார். அப்போது என்னை வலுக்கட்டாயமாக எனது அனுமதியின்றி கட்டிப்பிடித்து முத்தமிட்டார்.

பணி நேரத்தில் உல்லாசமாக இருக்கலாம் வா என்று அழைத்து வற்புறுத்துகிறார். அதற்கு நான் மறுத்தேன். இதனால் என்னுடன் சண்டையிட்டார். எனவே இச்சம்பவம் குறித்த வீடியோவை எனது செல் போனில் எனது பாதுகாப்புக்காக எடுத்து வைத்தேன். அவரது கணவருக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்தேன். ஏனென்றால் இவர் அடிக்கடி எனது அறைக்கு வந்து எனக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இப்பிரச்சினைக்கு முடிவு கட்டுவதற்காகவே அந்த வீடியோவை நான் அனுப்பினேன் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்தகடிதத்தின் அடிப்படையில் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வில் வெற்றி

செக்ஸ் குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்கொலைக்கு முயன்றுள்ள உதய் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேச காவல்துறையில் போலீஸ்காரராக பணியாற்றினார். கடந்த 2019-ஆம் ஆண்டில் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார்.

தனது கடின உழைப்பிற்குப் பின் 2024-ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். ஒரு சாதாரண போலீஸ்காரராக இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியாக உயர்ந்த இவரது சாதனை பத்திரிகைகளில் வெளியாகி பலரால் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இவரை நேரடியாக அழைத்து வாழ்த்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com