"வேளாண் சட்டத்தை போல அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -ராகுல் காந்தி

வேளாண் சட்டத்தை போல அக்னிபத் திட்டத்தையும் திரும்ப பெற வேண்டும் என்று ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
"வேளாண் சட்டத்தை போல அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்" -ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் வன்முறை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போரட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இளைஞர்களின் குரலை  மத்திய அரசுகேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; "தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக "ஜெய் ஜவான், ஜெய் கிசான்" வீரர்களை மத்திய அரசாங்கம் அவமதித்து வருகிறது. வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் நான் முன்பே கூறினேன். எனவே, அதேவழியில், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com