சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை போலீஸ் அதிகாரிகள் கைது

கேரளாவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை நடந்துள்ளது இது தொடரபாக போலீஸ் அதிகாரிகள் கைது செய்யபட்டு உள்ளனர்.#Keralanews #Tamilnews
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விபசாரத்தில் தள்ளிய கொடுமை போலீஸ் அதிகாரிகள் கைது
Published on

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் ஆலப் புழாவில் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஏராளமான ஆண்கள் வந்து சென்றனர். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைதொடர்ந்து போலீசார் அந்த வீட்டை ரகசியமாக நோட்டமிட்டனர். பிறகு அங்கு அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது.

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆழப்புழாவை சேர்ந்த ஆதிரா (வயது 35) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அந்த சிறுமியும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டார்.

சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆதிரா மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அந்த சிறுமியின் ஏழ்மையை பயன்படுத்தி பண ஆசை காட்டி அவரை ஆதிரா விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். சிறுமி தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் என்று பலருக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கி உள்ளார். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியை கற்பழித்ததாக ஆழப்புழா மாராரிகுளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லைஜு, ஏட்டு நெல்சன் தாமஸ் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் விபசாரத்திற்கு உதவியதாக ஆதிராவின் கள்ளக்காதலன் பிரின்ஸ் மற்றும் அவரது நண்பர் ஜினு ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். இந்த சிறுமியை கற்பழித்த மேலும் பல போலீஸ் அதிகாரிகள், தொழில் அதிபர்கள் பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com