

பெங்களூரு,
கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோரை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் முழுவதும் கர்நாடகத்திற்குள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் டிக்கெட் இல்லாமல் பயணிகள் பயணம் செய்கிறார்களா என சோதனை நடத்தப்பட்டது.
மொத்தம் 42 ஆயிரத்து 512 பஸ்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 4 ஆயிரத்து 476 பேரிடம் இருந்து ரூ.8 லட்சத்து 94 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட இருந்த ரூ.1.52 லட்சம் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.