வடமாநிலங்களில் நில அதிர்வு; மக்கள் அச்சம்

மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறி சாலைகள், தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
வடமாநிலங்களில் நில அதிர்வு; மக்கள் அச்சம்
Published on

டெல்லி,

வட மாநிலங்களில் இன்று இரவு 9.50 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. டெல்லி, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறி சாலைகள், தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஏற்பட்ட நில அதிர்வால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com