காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி காலமானார்


Suresh Kalmadi
x

இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சுரேஷ் கல்மாடி உயிரிழந்தார்

மும்பை,

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாடி(81) புனேவில் உள்ள தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் .

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில நாட்களாக புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.​ இருப்பினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

அவரது உடல் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வைகுந்த் ஸ்மஷன்பூமியில் தகனம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

1 More update

Next Story