மாநிலங்களவை எம்பிக்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பதவியேற்பு

மாநிலங்களவை எம்பிக்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்
மாநிலங்களவை எம்பிக்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும். கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.

கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர். கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. இரவு 7 மணிவரை இந்தக்கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் மாநிலங்களவைக்கு தேர்வான புதிய உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதன்படி மாநிலங்களவை எம்பிக்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். திமுக எம்.பிக்கள் மூவருக்கும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com