டெல்லியில் நடந்த திரிணாமுல் காங்கிரசாரின் 3 நாள் தர்ணா முடிவுக்கு வந்தது ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை கண்டித்தும், தங்கள் கட்சி எம்.பி.க்கள் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3 நாள் போராட்டத்தை அறிவித்து இருந்தது.
டெல்லியில் நடந்த திரிணாமுல் காங்கிரசாரின் 3 நாள் தர்ணா முடிவுக்கு வந்தது ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
Published on

புதுடெல்லி

மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை கண்டித்தும், தங்கள் கட்சி எம்.பி.க்கள் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3 நாள் போராட்டத்தை அறிவித்து இருந்தது. அதன்படி ஒடிசா, திரிபுரா, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநில தலைநகரங்களில் அந்த கட்சியினர் கடந்த 9ந்தேதி முதல் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக தலைநகர் டெல்லியிலும் கடந்த 3 நாட்களாக தர்ணா போராட்டம் நடந்தது. மூத்த தலைவர்களான சவுகதா ராய், டெரிக் ஓ பிரையன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சி எம்.பி.க்கள் மற்றும் மேற்கு வங்க மந்திரிகள் என ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நேற்று முடித்துக் கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கட்சித்தலைவர் சவுகதா ராய் தலைமையில் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியை சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுகதா ராய், ரூபாய் நோட்டு வாபஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கைதை கண்டித்து நடத்தப்பட்ட டெல்லி போராட்டம் முடிவடைந்தாலும், இது தொடர்பான அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com