மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங். எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங். எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங். எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 71.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிழக்கு மிட்னாபூர் தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்கரோனா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.இதனை அடுத்து மிட்னாபூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரக கோளாறு இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவான தமோனாஸ் கோஷ் என்பவர் கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com