முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியுள்ளது.
முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது
Published on

புதுடெல்லி,

முத்தலாக் தடை மசேதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் முத்தலாக் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்த நிலையில் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.வின் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினர். மாநிலங்களவையில் அ.தி.மு.க.வுக்கு 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டாம் என 100 பேர் வாக்களித்தனர். முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக 84 பேர் வாக்களித்தனர். இதனால் முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்பும் திருத்தம் நிராகரிக்கப்பட்டது.

பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது முடிவை தெரிவித்துள்ளனர். முத்தலாக் மசேதாவிற்கு எதிராக அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி இருந்தன.

தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டீரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இதேபோன்று தேசியவாத காங்கிரஸ் உறுப்பினரும் அவைக்கு வரவில்லை.

இதனிடையே மாநிலங்களவையில் முத்தலாக் சட்ட திருத்த மசேதா மீதான வாக்கெடுப்பு நிறைவு பெற்றது. இநத மசோதாவுக்கு 99 பேர் ஆதரவும், 84 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனை அடுத்து முத்தலாக் தடை மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com