திரிபுரா: ஓடும் காரில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

இரவு தனிமையை பயன்படுத்திக் கொண்ட கவுதம் ஷர்மா, மற்றும் நண்பர்கள், மாணவியை கூட்டாக பாலியல் வன்கொடுமையில் செய்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அகர்தலா, -

திரிபுரா மாநிலத்தின் மேற்கு திரிபுரா மாவட்டம் அமடாலி பைபாஸ் சாலையில், ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தநிலையில், அந்தப் பெண் சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரியவந்தது.

கல்லூரி மாணவியான அவர், இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். வழியில் ஏற்கனவே அறிமுகமான கவுதம் ஷர்மா என்பவர், அவரை காரில் ஏறிக்கொள்ளச் சொல்லி உள்ளார். தெரிந்தவர் என்பதால் மாணவி காரில் ஏறி பயணித்துள்ளார். காரில் கவுதம் ஷர்மாவின் நண்பர்கள் 2 பேரும் இருந்துள்ளனர்.

இரவு தனிமையை பயன்படுத்திக் கொண்ட கவுதம் ஷர்மா, மற்றும் நண்பர்கள், அவரிடம் அத்துமீறி நடந்து கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு. பின்னர் அவரை அமடாலி பைபாஸ் சாலையில் தள்ளி விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

மாணவி மயங்கிய நிலையில் கிடந்தபோது, அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் கவுதம் ஷர்மா கைது செய்யப்பட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com