6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அகர்தலா,
திரிபுரா மாநிலம் உனகொட் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2022ம் ஆண்டு உறவினர் வீட்டில் நடந்த மத நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் இசைக்குழுவினர் பங்கேற்றனர். அந்த இசைக்குழுவில் இடம்பெற்றிருந்த சமீர் சப்தகர் (வயது 26) என்ற இளைஞர், சிறுமியை வீட்டில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அலறியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் அறையை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு இளைஞர் சமீர் சப்தகர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்த நிலையில் அவரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து, இளைஞர் சமீர் சப்தகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீர் சப்தகர் மீதான பாலியல் தொல்லை வழக்கு தொடர்பான விசாரணை உனகொட் மாவட்ட கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சமீர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, குற்றவாளி சமீர் சிறையில் அடைக்கப்பட்டார்.