அனில் அம்பானிக்கு வலுக்கும் சிக்கல்: சி.பி.ஐ. புதிய வழக்குப்பதிவு

ரூ.3 ஆயிரத்து 750 கோடிக்கும் மேல் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
அனில் அம்பானிக்கு வலுக்கும் சிக்கல்:  சி.பி.ஐ. புதிய வழக்குப்பதிவு
Published on

புதுடெல்லி,

இந்திய தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் லிமிடெட் நிறுவனம் மீது சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது.

2009-2012 ஆண்டு காலத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்தை ரூ.3 ஆயி ரத்து 750 கோடி மதிப்புள்ள கடன்பத்திரங்களை வாங்கத் தூண்டியதாகவும், அதற்கு வழங்கப்பட்ட தவறான சொத்துக் காப்பீடு தகவல்களால் ரூ.4 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு இழப்பு ஏற் பட்டதாக எல்.ஐ.சி. நிறுவனம் புகார் அளித்துள்ளது.

அந்த நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் மீது கொடுத்துள்ள 4-வது வழக்கு இதுவாகும். சி.பி.ஐ., தடயவியல் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதில் வங்கி கள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்துதல், திசை திருப்புதல், விற்பனை ரசீது நிதிஉதவியை தவறாக பயன்படுத்துதல், போலி ரசீது உள்ளிட்ட வழிகளில் மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.3 ஆயிரத்து 750 கோடிக்கும் மேல் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com