ராஜஸ்தானில் கார் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி

ராஜஸ்தானில் கார் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
File image
File image
Published on

ஜெய்ப்பூர்,

டெல்லியில் இருந்து சிக்கார் நோக்கி காரில் 3 பேர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அதிக வேகமாக வந்த லாரி ஒன்று அந்த கார் மீது அதிபயங்கரமாக மோதியது.

இதில் காரில் பயணித்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com