

நியூயார்க்,
வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை விரைவில் சந்திக்க இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் 4-வது முறையாக சந்தித்து பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு மத்தியில் டிரம்பை வடகொரியாவுக்கு வரும்படி கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது.
இந்த சூழலில், ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த டொனால்டு டிரம்பிடம், வடகொரிய தலைவரை எப்போது சந்திப்பீர்கள் என்று செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த, டிரம்ப், சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றார். முன்னதாக, தென்கொரிய அதிபரை டிரம்ப் சந்தித்து பேசினார்.