

புதுடெல்லி
இரட்டை இலை சின்னம் தொடர்பான இந்திய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து சசிகலா , தினகரன் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னமும், கட்சி பெயரும் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் வாதம்.
அனைத்திந்தியா அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம், அம்மா எம்.ஜிஆர் முன்னேற்ற கழகம் என மூன்று பெயர்களை டிடிவி தினகரன் தரப்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் பரிந்துரைத்து உள்ளார். இந்த பெயரகளில் ஏதாவது ஒன்றை தங்கள் அணிக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் தினகரன் அணிக்கு சின்னமும், கட்சிப் பெயரும் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது தேர்தல் ஏதும் இல்லை என்பதால் அவசரம் காட்ட தேவையில்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது.