நடிகை துனிஷா தற்கொலைக்கு காரணம் 'லவ் ஜிகாத்'? மகாராஷ்டிரா பா.ஜனதா எம்.எல்.ஏ

நடிகை துனிஷா சர்மா தற்கொலைக்கு லவ் ஜிகாத் காரணம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
நடிகை துனிஷா தற்கொலைக்கு காரணம் 'லவ் ஜிகாத்'? மகாராஷ்டிரா பா.ஜனதா எம்.எல்.ஏ
Published on

நடிகை தற்கொலை

பிரபல தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா வசாய் பகுதியில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். துனிஷாவின் இந்த மரணம் பெரும் பரபரப்பையும் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக துனிஷாவுடன் நடித்த ஷீசன் கான் கைது செய்யப்பட்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் துனிஷா சர்மாவின் மரணம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் புதிய காரணத்தை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதாவது இந்த மரண பின்னணியில் லவ் ஜிகாத் இருக்கலாம் என்று அவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சந்தேகம் அளிக்கிறது...

துனிஷா, ஷீஷன் கான் என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டார். துனிஷாவின் மரணத்திற்கு லவ் ஜிகாத் காரணமாக இருக்கலாம்.

துனிஷா சர்மாவின் குடும்பத்தினருக்கு 100 சதவீதம் நீதி கிடைக்க வேண்டும். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன?, இதன் பின்னால் லவ் ஜிகாத் இருக்கிறதா? என விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும். சதிகாரர்கள் யார்? ஷீஷன் கான் பின்னால் இருக்கும் அமைப்பு எது என கண்டுபிடிக்க வேண்டும். போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குற்றவாளிகள் தப்ப மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com