மத்திய அரசுடன் மோதல் : இந்தியாவின் டுவிட்டர் இயக்குனர் மஹிமா கவுல் பதவி விலகல்.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான டுவிட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.
மத்திய அரசுடன் மோதல் : இந்தியாவின் டுவிட்டர் இயக்குனர் மஹிமா கவுல் பதவி விலகல்.
Published on

புதுடெல்லி

குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில், டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கும் எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகின. இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவின் பேரில் 250 டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் அந்த கணக்குகள் அடுத்த இரண்டு நாட்களில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து டுவிட்டர் நிறுவனம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் மத்திய தகவல் தெழில்நுட்பத் துறை அமைச்சகம் டுவிட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. மத்திய அரசுக்கும் டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக மஹிமா கவுல் பதவி விலகி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தவறான தகவல் வெளியிட்டு வன்முறையை தூண்ட முயலும் சுமார் 1200 பேரின் கணக்குகளை முடக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று டுவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில், பட்டியலிடப்பட்ட 1178 கணக்குகள் பாகிஸ்தான் அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களுடையது என்று பாதுகாப்பு முகமைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து டுவிட்டர் நிர்வாகம் தரப்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

உலகிலேயே அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக சமூக வலைதள நிறுவனங்களின் வர்த்தகம் அதிகமுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள், திரைப் பிரபலங்கள், அரசு அதிகாரிகள் உட்பட கோடிக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான டுவிட்டரின் பொதுக்கொள்கை இயக்குநராக மஹிமா கவுல் என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுதெடர்பாக டுவிட்டரின் பொதுகொள்கை துணைத் தலைவர் மோனிக் மெக்கே கூறியதாவது:-

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான டுவிட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். அதனை இந்தாண்டு தொடக்கத்திலேயே அவர் தெரிவித்தார். 5 வருடத்திற்கும் மேலாக இங்கு பணியாற்றிய மஹிமா கவுல் அவரது வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் மற்றும் சொந்தங்கள் மீது கவனம் செலுத்த நினைக்கிறார். அவர் வருகிற மார்ச் இறுதி வரை பணியில் இருப்பார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com