டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவருக்கு சம்மன்

டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச்சேர்ந்த மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களுக்கு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. #ChiefSecretary #AAPMLAs
டெல்லி தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவருக்கு சம்மன்
Published on

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் கடந்த 19-2-2018 அன்றிரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அரசின் சார்பில் விளம்பர செலவுகள் அதிகரித்து வருவது தொடர்பாக அப்போது தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாசுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகியோர் முதலமைச்சர் முன்னிலையில் தன்னை தாக்கியதாக ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் கைது செய்தனர்.டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரும் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், நிதின் தியாகி, ராஜேஷ் ரிஷி ஆகிய இரு எம்.எல்.ஏக்களின் பங்கு குறித்து விசாரணை மேற்கொள்ள இரு எம்.எல்.ஏக்களுக்கும் டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் சம்மனில் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com