தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்னய்யா. இவரது மனைவி ரிது. இந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதற்காக தம்பதி தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது அன்னய்யா காரை கழுவ முடிவு செய்தார். இதனால் காரைவெளியே எடுத்து விட்டு, தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை (சம்ப்) திறந்த அவர், வீட்டுக்குள் ஏதோ பொருளை எடுக்க சென்றிருந் தார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் தொட்டி அருகே வந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதனால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

வீட்டில் இருந்து வெளியே வந்தபோது தான் குழந்தை தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடப்பதை பார்த்து சின்னய்யா அதிர்ச்சி அடைந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com