அருணாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து: ராணுவ வீரர்கள் 2 பேர் பலி

விபத்தில் ராணுவ வீரர் படுகாயமடைந்தார்.
அருணாச்சலபிரதேசம்: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து: ராணுவ வீரர்கள் 2 பேர் பலி
Published on

இட்டாநகர்,

அருணாச்சலபிரதேச மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டம் கெலொமாவில் இருந்து டக்சிங் பகுதிக்கு கடந்த 7ம் தேதி ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 3 வீரர்கள் பயணம் செய்தனர்.

சீன எல்லை அருகே ரெட்டி கிராமம் என்ற கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு ராணுவ வீரர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று காயமடைந்த ராணுவ வீரரை மீட்டனர். இந்த விபத்து குறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com