

ஆமதாபாத்,
குஜராத்தின் வதோதரா நகருக்கு அருகே உள்ள நவ்லாகி பகுதியில் கடந்த மாதம் 28-ந்தேதி வாலிபர் ஒருவருடன், 16 வயது சிறுமி ஒருவரும் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 பேர் அந்த வாலிபரை கொடூரமாக தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றனர். பின்னர் மறைவான இடத்தில் வைத்து அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்துவிட்டு தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் மீது தானாகவே கவனம் செலுத்திய முதல்-மந்திரி விஜய் ரூபானி, குற்றவாளிகள் இருவரையும் விரைவில் கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தப்பியோடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதன் பயனாக வதோதரா பகுதியில் நேற்று 2 குற்றவாளிகளும் போலீசாரிடம் சிக்கினர். கிஷன் மதசூரியா (வயது 28), ஜஷோ சோலங்கி (21) ஆகிய அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.