காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 பேர் கைது

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 பேரை காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 2 பேர் கைது
Published on

ஜம்மு,

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த காஷ்மீர் ரஜவுரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ராணுவத்துக்கு சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர். அவரும், அவருடைய நண்பரும் பிடிபட்டனர். அவர்கள் முக்கியமான பாதுகாப்பு நிலையங்களை வீடியோ எடுத்து, அவற்றை பாகிஸ்தானில் உள்ள தங்கள் எஜமானர்களுக்கு பணத்துக்கு விற்றுள்ளனர்.

ரகசிய தகவல் அடிப்படையில், ராணுவமும், போலீசாரும் இணைந்து அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com