

ஜம்மு,
மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அடுத்த பாண்டச் சவுக் பகுதியில் 37 பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 முதல் 3 பயங்கரவாதிகள், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் படுகாயங்களுடன் ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.